சந்தானம் சபாபதி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் ஏற்கனவே நடித்து முடித்து ரெண்டு மூணு வருஷமா ரீலிஸுக்காக காத்திருக்கும் சர்வர் சுந்தரம் வருகின்ற பெப்ரவரியில் வெளியாகுமென சர்வர் சுந்தரம் தயாரிப்பு நிறுவனமான Kenaya Films நேற்றையதினம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. #ServerSundaramFromFebruary சர்வர் சுந்தரம் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந் பால்கி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது "உணவே மருந்து" என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வர் சுந்தரம் இந்த பெப்ரவரியில் வெளியாகுமென படக்குழு நேற்றைய தினம் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் தியேட்டரில் பார்க்க ஆர்வமாக உள்ளனர் . இருப்பினும் சரியாக என்ன தேதியில் வெளியாகுமென குறிப்பிடவில்லை. எனினும் பெப்ரவரி20யில் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. உத்தியோக பூர்வமான ரீலீஸ் தேதி இன்னும் சில நாட்களில் படக்குழுவிடமிருந்து வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ச...
Exclusive Cinema News & Movie Reviews