தமிழ் சினிமாவில் ரீமேக் படம் பண்ணுவதென்பது இப்பொது புது பேஷன் ஆகிவிட்டது. மாறா, கபடதாரி, அந்தகன், பத்துதல போன்ற தமிழ் படங்கள் ரீமேக் படங்களாக தயாராகி வருகின்றது. இவ்வரிசையில் நடிகர் சந்தானமும் அடுத்து தெலுங்கில் 2019 வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக தகவல் கசிந்து வருகின்றது.
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ஏஜென்ட் சாய் சீனிவாஸ் ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சந்தானம் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை வஞ்சகர் உலகம் பட மனோஜ் பீதா இயக்குகிறாராம். மேலும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சீறு படத்தில் நடித்த ரியா சுமன் நடிக்கிறார். அத்தோடு இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.
ஏற்கனவே யுவன் சந்தானத்தின் மன்னவன் வந்தானடி, டிக்கிலோனா ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனும் இது தொடர்பான உத்தியோக பூர்வமான அறிவிப்பு ஒன்றும் வரவில்லை.
@iamtharson
மேலும் சினிமா, கிரிக்கெட் செய்திகளை அறிந்திட:
Follow on facebook:
Follow on twitter:
Follow on youtube:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக