வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

பாரிஸ் ஜெயராஜ் திரைவிமர்சனம்

சந்தானம், அனைகா, சஷ்ரிகா, பிருத்விராஜ், மொட்டை ராஜேந்திரன், பழைய ஜோக்ஸ் தங்கதுரை, மாறன், சேது மற்றும் பலர் நடிப்பில்  ஏ1 பட புகழ் ஜோன்சன். K இயக்கத்தில் வெளிவந்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தோட விமர்சனத்தை தான் பார்க்கவுள்ளோம்.



சந்தானத்தின் டகால்டி, பிஸ்கோத் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இந்நிலையில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் ஏ1 பட ஹிட் டைரக்டர் ஜோன்சனுடன் இணைந்து இப் பாரிஸ் ஜெயராஜ் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. 


கானா பாடகரான பாரிஸ் ஜெயராஜ் (சந்தானம்) ஊருக்குள்ள கலாட்டா பண்ணி வருகிறார். சந்தானம் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்வதற்கு அவரது அப்பாவே தடையாக இருக்கிறார். ஏன் தன்னுடைய மகன் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்வதை  தடுத்து நிறுத்த முயல்கிறார். என்பதும் தன்னுடைய அப்பாவையும் மீறி சந்தானம் தான் காதலித்த பெண்ணை  திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதும் தான் படத்தின் கதை.

அண்மையில் வெளிவந்த காமெடி தமிழ் படங்களை பார்க்கயில இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை. படத்தின் முதற்பாதி கதையே இல்லாமல் கானா பாடல்களோடு கடக்க இரண்டாம் பாதியில் பலவிடங்களில் காமெடி வேர்க்டவுட் ஆகி படத்தை ஒரு வழியாக காப்பாற்றிவிட்டது. இந்த படத்துல சந்தானம் மட்டுமில்லாமல் மற்றைய நடிகர்களான மொட்டை ராஜேந்திரன், சேது, மாறன், வினோத், தங்கதுரை, கணேஷ் போன்ற எல்லா பாத்திரங்களும் முடிந்தளவு சிரிக்க வைத்துள்ளமை பாராட்டுக்குரியது. படத்தில சந்தானத்திற்கு வெயிட்டான இன்னொரு கரெக்டர் என்டா அது சந்தானத்தின் அப்பா கரெக்டர் தான் அப்பா பாத்திரத்தில நடித்த தெலுங்கு நடிகர் பிருத்விராஜும்  நல்லாவே நடித்து இருக்கிறார்.

காமெடியை தாண்டி படத்தில் வர்ற இன்டர்வெல் டுவிஸ்ட் மற்றும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் ஆகியன படத்தில எதிர்பாராத விதத்தில் அமைந்திருந்ததால் ரசிக்கும்படி உள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் கானா பாடல்கள் படத்தை நகர்த்த முயன்றுள்ளது. சந்தானம் டான்ஸ், ஃபைட் மூலம் தன்னை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருப்பது நல்லாவே தெரியுது.

மொத்ததில இந்த பாரிஸ் ஜெயராஜ் ஜாலியாக ஒருவாட்டி பார்க்கக்கூடிய படம் தான்.


Y.THARSON 



#ParrisJeyaraj #TamilMovie #ParrisJeyarajReview #Santhanam #AnaikaSoti #Sastika #JohnsonK #KKumar #LarkStudios #SanthoshNarayanan #ProYuvraj 



மேலும் சினிமா, கிரிக்கெட் செய்திகளை அறிந்திட:

Follow on facebook:

Follow on twitter:

Follow on youtube:







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக