சந்தானம், அனைகா, சஷ்ரிகா, பிருத்விராஜ், மொட்டை ராஜேந்திரன், பழைய ஜோக்ஸ் தங்கதுரை, மாறன், சேது மற்றும் பலர் நடிப்பில் ஏ1 பட புகழ் ஜோன்சன். K இயக்கத்தில் வெளிவந்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தோட விமர்சனத்தை தான் பார்க்கவுள்ளோம். சந்தானத்தின் டகால்டி, பிஸ்கோத் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இந்நிலையில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் ஏ1 பட ஹிட் டைரக்டர் ஜோன்சனுடன் இணைந்து இப் பாரிஸ் ஜெயராஜ் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. கானா பாடகரான பாரிஸ் ஜெயராஜ் (சந்தானம்) ஊருக்குள்ள கலாட்டா பண்ணி வருகிறார். சந்தானம் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்வதற்கு அவரது அப்பாவே தடையாக இருக்கிறார். ஏன் தன்னுடைய மகன் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்வதை தடுத்து நிறுத்த முயல்கிறார். என்பதும் தன்னுடைய அப்பாவையும் மீறி சந்தானம் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதும் தான் படத்தின் கதை. அண்மையில் வெளிவந்த காமெடி தமிழ் படங்களை பார்க்கயில இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை. படத்தின் முதற்பாதி கதையே இல்லாமல் கானா பாடல்களோடு கடக்க இரண்டாம் பாதியில் பலவிடங்களில் காமெடி வேர்க்டவுட் ஆ...
Exclusive Cinema News & Movie Reviews