இந்நிலையில் இடையில் இலங்கைக்கு வந்து விளையாடுவது அணிக்கு அதித அழுத்தத்தை ஏற்படுத்தும் விடும் என்பதால் இலங்கை சுற்றுப்பயணத்திற்கென மற்றுமொரு இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்துள்ளது.
இலங்கை அணியுடன் இந்திய அணி முதலில் யூலை 13, 16 மற்றும் 18 தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளிலும் யூலை 21, 23 மற்றும் 25 தேதிகளில் 3 ரி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் இரவு இலங்கை அணியுடன் விளையாடவுள்ள 20பேர் கொண்ட இந்திய அணி குழாமை பிசிசிஐ அறிவித்துள்ளது. இவ்வணியின் தலைவராக ஷிகர் தவான் பெயரிடப்பட்டுள்ளதுடன் உப தலைவராக புவனேஸ்வர் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வணியில் 2021 ஐபிஎல் சீசனில் பிரகாசித்த தேவ்தத் படிக்கல், ருதுராஜ், சேட்டன் சாரியா, நிதிஷ் ராணா, வருண் சக்கரவர்த்தி மற்றும் கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு போர்ம் அவுட்டான மணிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், சஹால் போன்ற சிரேஸ்ட வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அணி முழு விபரம் இதோ:
Y.Tharson
#BCCI #SLvIND #India #Dhawan #BhuvneshwarKumar #DevduttPadikkal
மேலும் சினிமா, கிரிக்கெட் செய்திகளை அறிந்திட:
Follow on facebook:
Follow on twitter:
Follow on YouTube: