ஞாயிறு, 22 மே, 2022

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்து T20 தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிப்பு!!! இவருக்கு வாய்ப்பு இல்லையா???

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜூன் மாதம் சொந்த மண்ணில் ஆடவிருக்கும் ஐந்து ரி20 போட்டிகளைக் கொண்ட தொடருக்கான இந்திய குழாம் இன்றைய தினம் BCCI அறிவித்துள்ளது. இந்த தொடரின் தலைவராக கே எல் ராகுலும் உப தலைவராக ரிஷப் பந்தும் பெயரிடப்பட்டுள்ளனர்.




இத்தொடரில் சிரேஷ்ட வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரவீந்திர ஜடேஜா, சூரியகுமார் ஜாதவ், தீபக் சஹர் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.




இந்த குழாமில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் இளைய வீரர்களான உம்ரான் மலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் இந்த ஐபிஎல் தொடரில் பிரகாசித்து வரும் சிரேஷ்ட வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சஞ்சு சாம்சன் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.





இக் குழாமில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்து வருகின்ற ராகுல் திரிபாதியை இணைத்துக் கொள்ளாததை இந்திய ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் தீட்டித் தீர்த்து வருகிறது. ராகுல் திரிபாதி கடந்த சில ஐபிஎல் சீசன்களாக நன்றாக செயற்பட்டு வருகின்றபோதிலும் இவருக்கு ஏன் வாய்ப்பை BCCI மறுக்கின்றது என்பது கேள்விக்குறியே.




அதேசமயம் நடைப்பெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வருகின்ற அபிஷேக் சர்மா, ஷபாஸ் அகமட், ரிங்கு சிங் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான மொசிங் கான், முகேஷ் சௌத்ரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



அறிவிக்கப்பட்ட இந்திய அணி: கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (Wk), தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (துணை கேப்டன், WK), தினேஷ் கார்த்திக் (WK), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக