தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்த சந்தானம் அதையடுத்து கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது சந்தானம் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. கடைசியாக மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த 'குலு குலு' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த கோவர்தன் என்பவர் சமீபத்தில் சந்தானத்தை சந்தித்து ஒரு புதிய கதை கூறியுள்ளாராம். முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள அந்தக் கதை சந்தானத்திற்கு பிடித்துவிட்டதால் உடனே நடிக்க சம்மதித்துவிட்டாராம். மேலும் இந்தப் படத்தில் சந்தானம் பல கெட்டப்புகளில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தை ட்ரரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம். படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tharson Talkies
Exclusive Cinema News & Movie Reviews