என்னதான் ஆர்சிபி ஒருமுறையேனும் சாம்பியன் ஆகவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணியாக திகழ்கிறது. ஒவ்வொரு முறையும் பல அதிரடி நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்டபோதிலும் சொதப்பி வருவதுதான் வழமை.
இவ்வருடமும் கிண்ணத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான அணிவீரர்களை தக்கவைத்துக்கொள்ளல், வெளியேற்றல், அணிகளுக்கிடையே வீரர்களை வணிகரீதியாக பெற்றுக் கொள்ளல் போன்ற செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்சிபி தனது அணியிலிருந்து கேப்டன் விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ், யுஸ்வேந்தீர சஹால், வொஷிங்டன் சுந்தர், தேவ் படிக்கல், நவ்தீப் சைனி, முகமட் சிராஜ் போன்ற 12 வீரர்களை தக்கவைத்துக் கொண்டதுடன் கிறிஸ் மோரிஸ், மொயின் அலி, ஆரோன் பின்ச், உமேஷ் யாதவ், சீவம் டூபே, இசுறு உடானா, உட்பட 10 வீரர்களை அதிரடியாக விடுவித்துள்ளது. அந்த முழுவிபரம் இதோ:
ஆர்சிபியில் போன சீசனில் பந்துவீச்சில் பெரிதும் பொழிந்த கிறிஸ் மோரிஸை விடுவித்தது தான் ஆச்சரியம். இதனை கிரிக்கெட் ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்சிபி டெல்லி கேபிட்டல் அணியிலிருந்து ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டரான டேனியல் சாம்ஸ் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரையும் விலைக்கு வாங்கியுள்ளது. டேனியல் சாம்ஸ் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய பிக்பாஸ் லீக் போட்டிகளில் கலக்கி இருந்தமை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இவர் சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாக ஆடிய 9 போட்டிகளில் இரண்டு அரைச்சதங்களுடன் 199 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 14 சிக்ஸர்கள் உள்ளடக்கம் என்பதுடன் இவரது ஸ்ரேக் ரேட் 191.35 ஆக காணப்படுகிறது. மேலும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாகவே ஆர்சிபி இவரை விலைக்கு வாங்கியுள்ளது. போன வருடமும் போல்டை மும்பை இந்தியன்ஸிடம் கொடுத்து தவறு செய்ததைப் போன்று இந்த வருஷமும் டேனியல் சாம்ஸை கொடுத்து தவறு செய்துள்ளதென டெல்லி ரசிகர்கள் புலம்பிக்கொள்வது காதுகளில் கேட்கத்தான் செய்கின்றது.
#Daniel Sams
ஆர்சிபி டெல்லி கேபிட்டல் அணியிலிருந்து இவரோடு சேர்த்து ஹர்ஷல் பட்டேலையும் வாங்கியுள்ளது. இவர் ஏற்கனவே ஆர்சிபியில் முதலும் விளையாடி இருக்கிறார். இவர் இதுவரை ஆடிய 48 ஐபிஎல் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விரண்டு வீரர்களும் ஆர்சிபியில் இணைந்தது. அணிக்கு நலமாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...
உங்களுடன் நான்...
Y.THARSON
#RCB #PLAYBOLD #WeAreChanllengers #Trade
Follow on facebook:
Follow on twitter:
Follow on youtube:
👌
பதிலளிநீக்கு